வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், ‘பாலிவுட்’ நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சிறப்பு நீதிமன்றம், ‘ஜாமின்’ வழங்கி உத்தரவிட்டது.
கர்நாடகாவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி கடந்த 2017 முதல் புதுடில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்த போது மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தொழிலதிபர்கள் மல்வீந்தர் மற்றும் ஷிவிந்தர் சிங் குடும்பத்தினரிடம் 200 கோடி ரூபாய் பறித்து மோசடி செய்தார்.
![]() |
இந்த பணத்தில், ‘பாலிவுட்’ நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பல விலை உயர்ந்த பரிசுகளை அவர் வாங்கிக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஜாக்குலினை பலமுறை அழைத்து அமலாக்கத்துறை நேரில் விசாரித்தது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், ஜாக்குலினை குற்றவாளி என குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களிலும், ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வினியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜாமின் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் மனு தாக்கல் செய்தார். ‘இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன், ‘கஸ்டடி’ தேவையில்லை’ என, ஜாக்குலின் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிபதி, ஜாக்குலினுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement