புதுடில்லி :வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு அமெரிக்க, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனமான, ‘அமேசான்’ நிதி உதவி அளிப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், ‘ஆர்கனைசர்’ என்ற வார பத்திரிகையில், ‘அமேசிங் கிராஸ் கனெக் ஷன்’ என்ற பெயரில் வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் மத மாற்ற நடவடிக்கையில் அமெரிக்க பாப்டிஸ்ட் தேவாலயம் ஈடுபட்டுள்ளது. இதற்கு, ‘அமேசான்’ நிறுவனம் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிதி உதவி, ‘அமேசான் ஸ்மைல்’ என்ற அறக்கட்டளை வாயிலாக அளிக்கப்படுவதாக அருணாச்சலம் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக நீதி அமைப்பு தெரிவித்துள்ளது.
அமேசான் வழியே நம் நாட்டில் வாங்கப்படும் ஒவ்வொரு பொருளில் இருந்தும், ஒரு தொகை இந்த மத மாற்ற நடவடிக்கைக்கு செல்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் 25 ஆயிரம் பேர் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க பாப்டிஸ்ட் தேவாலயத்தின் உள்நாட்டு பிரிவான அனைத்திந்திய மிஷன் என்ற அமைப்பு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement