ராக்கிங் கொடுமையை தடுக்க அதிரடி நடவடிக்கை – டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுத்தல் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், உச்ச நீதிமன்ற ஆணையில் ராகவன் கமிட்டியின் பல பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.

ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே தாமதம் செய்தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ராக்கிங்கில் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது பெற்றோர்/பாதுகாவலர் நேரடியாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி நிறுவனத்தால் மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள்: மற்றும் முதலாமாண்டு மற்றும் சீனியர் மாணவர்களிடையே இணக்கம் கல்வி நிறுவனத்தாரால் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராக்கிங் தடுப்புக் குழு மற்றும் ராகிங் எதிர்ப்புப் படை இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு இருக்க வேண்டும்.

விடுதி கண்காணிப்பாளர் எல்லா நேரங்களிலும் அணுகக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய உறுப்பினர்கள், ராகிங் எதிர்ப்புக் குழு உறுப்பினர்கள். மாவட்ட மற்றும் உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்.

ராக்கிங்கில் ஈடுபடவோ அல்லது அதற்கு துணைபுரிந்து விடவோ கூடாது என்ற உறுதிமொழியைப் ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு மாணவருக்கும் கையேடு துண்டறிக்கை மூலமாக விநியோகிக்கப்பட்டு, உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வளாகத்தில் பல இடங்களில் பதாகைகள்: விளம்பரங்கள் மூலமாக காட்சிப்படுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும், ராக்கிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைய வழி காவல் உதவி/இலவச உதவி எண்ணில் இருந்து பெறப்படும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.