கடலூர்: ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பருவமழை காலங்களில் டெல்டா மாவட்ட மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
