அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை! தமிகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என தமிகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில்  கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தவறு ஏற்பட்டதன் காரணமாக, இளம்வீராங்கனை பிரியா உயிரிழந்தார். இது அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது கடுயைமையான விமர்சனங்களை  ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர், செவிலியர் வருகை, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும்,  அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள பறக்கும் படை அமைக்க வேண்டும் என கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.