ஆணவக் கொலை செய்து விடுவார்கள்: காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள் – கணவன் புகார்

ஈரோட்டில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை கொலை செய்துவிடுவதாக பெண் வீட்டார் மிரட்டுவதாக காதல் கணவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஹரிஹரன் என்பவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சுகந்திக்கும் பணியிடத்தில் காதல் ஏற்பட்டுள்ளது. மாற்று ஜாதியைச் சேர்ந்த இருவரும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டு ஓசூர் அருகே வசித்து வந்தனர்.
image
இந்நிலையில் சுகந்தி வீட்டார் இருவரையும் சமாதானப்படுத்தி சுகந்தியை அழைத்துச் சென்றதாகவும் ஆனால், தற்போது ஜாதியை காரணம் காட்டி இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக சுகந்தி வீட்டார் மீது ஹரிஹரன் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுகந்தி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதால் ஆணவக்கொலை செய்துவிடுவார்கள்.
image
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக காதல் மனைவியை மீட்டுத் தரவேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு வழங்கினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.