இளைஞர் கடத்தப்பட்டு சித்திரவதை: ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு-செய்திகளின் தொகுப்பு



டிபென்டர் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 2023 ஜனவரி 30ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ, இந்த வழக்கு தொடர்பான இரண்டு காணொளி ஆதாரங்களை முன்வைக்க தயாராக இருப்பதாகவும், வீடியோ ஆதாரங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.