ஒவ்வொரு முறையும் அவங்கள பார்த்தே ஆகணுமா என்ன?-பொங்கி எழுந்த இபிஎஸ்!

திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் (நவம்பர் 11) தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை மதுரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றிருந்தார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான

. அவரை போலவே அதிமுகவின் இன்னொரு அணியின் தலைவராக இருந்து கொண்டிருக்கம் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை வரவேற்றார்.

ஆனால், அதற்கு அடுத்த நாள் (நவம்பர் 12), இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர்

அமித் ஷாவை, விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கிலேயே சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் இந்த முறை அமித் ஷா எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை.

இதுகுறித்து மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ” தமிழகத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பாஜக தேசிய கட்சி. பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் அவர்களை சந்திக்க வேண்டும் என்று அவசியமி்ல்லை” என்று ஆவேசமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி விவகாரத்துக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்றிருந்தார். மூன்று நாள் திட்டமிட்டிருந்த அந்த பயணத்தில் அமித் ஷாவை மட்டுமே அவரால் சந்திக்க முடிந்தது.

பிரதமர் மோடியை சந்திக்க முடியாமல் போனது. இதனால் அப்செட்டான இபிஎஸ். தமது டெ்ல்லி பயணத்தை ஒரே நாளில் முடித்து கொண்டு தமிழகம் திரும்பினார். இந்த நிலையில், சமீபத்திய சென்னை வருகையின்போது அமித் ஷாவை சந்திக்காதது குறித்து இபிஎஸ் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.