
கன்னட இயக்குனர் முரளி கிருஷ்ணா காலமானார்
வழக்கறிஞராக இருந்து இயக்குனர் ஆனவர் கே.ஆர்.முரளி கிருஷ்ணா. 2019ம் ஆண்டு காரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் தமிழ் எழுத்தாளரான ஆர்.கே.நாராயணனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இது தவிர வேறு சில படங்களையும் இயக்கினார். இயக்கம் மட்டுமின்றி, பாலா நூகே(1987), கர்ணனா சம்பது(2005), ஹ்ருதய சாம்ராஜ்யம்(1989) மற்றும் மராயி குடிகே(1984) உள்பட பல படங்களையும் தயாரித்துள்ளார்.
63 வயதான முரளி கிருஷ்ணா பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முரளி கிருஷ்ணாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மனைவி உள்ளனர்.