கெர்சனில் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேக நபர்கள்! வெளியான புகைப்படங்கள்

உக்ரைனின் கெர்சனில் புடின் துருப்புகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட சிலர் உள்ளூர்வாசிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

ரஷ்ய படைகளுக்கு உதவி  

கெர்சனை விட்டு ரஷ்யா வெளியேறிய பின்னர், அந்நகரை மீட்டுவிட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்தார்.

எனினும் நகரத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில ரஷ்யர்கள் இன்னும் இருப்பதாக அச்சம் நிலவியது.

இந்த நிலையில், ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்படும் சிலர் கெர்சன் நகர வாசிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது கைகள் கட்டப்பட்டு, கண்கள் டேப்பினால் மூடப்பட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சிலர் முகத்தில் ரத்தம் தோய்ந்தபடி காணப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கெர்சனின் வடமேற்கே உள்ள Mykolaiv-க்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.

கெர்சனில் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேக நபர்கள்! வெளியான புகைப்படங்கள் | Suspected Collaborators Arrested In Kherson

@Anadolu Agency via Getty Images

கெர்சனில் பாதுகாப்பு குழுக்களால் பத்து வெடிகுண்டு செயலிழப்புகள் செய்யப்பட்டன.

இதற்கிடையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ‘நாங்கள் எல்லாவற்றையும் மீட்டெடுப்போம், என்னை நம்புங்கள், அதற்கு நேரம் எடுக்கும்’ என சூளுரைத்தார்.  

கெர்சனில் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேக நபர்கள்! வெளியான புகைப்படங்கள் | Suspected Collaborators Arrested In Kherson

@Anadolu Agency via Getty Images

கெர்சனில் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேக நபர்கள்! வெளியான புகைப்படங்கள் | Suspected Collaborators Arrested In Kherson

@Anadolu Agency via Getty Images

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.