சென்னை: தமிழகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலைமையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாக வெளியான விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே வீடற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாக ஆங்கில செய்தித்தாளில் செய்தி வெளியானது.
போதிய கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண் குழந்தைகள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆங்கிலச் செய்தித்தாள் வெளியிட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர், ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.