சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் தனியாக நடந்து சென்றபோது, அந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர்,பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி மாணவியை வற்புறுத்தியுள்ளார். மாணவி இதற்கு மறுத்ததால், தானும் ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர் என்று அந்த வாலிபர் விடாமல் மாணவியிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த ஐ.ஐ.டி. காவலாளி ஒருவர் அங்கு வந்து, அந்த வாலிபரை எச்சரித்து, மாணவியை அங்கிருந்து செல்லும்படி அனுப்பிவைத்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேளச்சேரி, தண்டீஸ்வரம் பகுதியைச்சேர்ந்த வசந்த் எட்வர்ட் (வயது 34) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகத்தில் முன்பு ஊழியராக வேலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.