`ஜி-20 தலைமையேற்ற இந்தியா முதல் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் வரை!' – உலகச் செய்திகள்

போலி ட்விட்டர் கணக்குகள் பெருகுவதால் அதிகாரபூர்வ கணக்குகளுக்குப் பணம் வசூலிக்கும் முடிவை தள்ளிவைத்த எலான் மஸ்க், இந்த மாதம் 29-ம் தேதி புளூ டிக்கை ரீ-லாஞ்ச் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

மெக்ஸிகோ நாட்டில் மீட்புப்பணிகளுக்கு உதவிய ஃப்ரிடா என்ற நாய் இறந்துவிட்டது. இதற்கு மக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலைப் பதிவுசெய்து வருகின்றனர்.

வடிவமைப்பாளர் டாம் ஃபோர்டின் நிறுவனத்தை வாங்க முடிவு செய்திருக்கிறது விலையுயர்ந்த அழகுசாதன நிறுவனமான எஸ்டீ லாடர்.

ஹைடியில் உள்ள உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் அதிகரித்து வரும் காலரா நோய்க்கு உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

உலக மக்கள்தொகை 8 பில்லியனாக உயர்வு!

அடுத்த ஆண்டில் உலக மக்கள்தொகையில் முதலிடம் பிடிக்கும் இந்தியா!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

எகிப்தில் அதிகரித்து வரும் எண்ணெய் கழிவுகளால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள்.

இங்கிலாந்தில் பரவி வரும் பறவை காய்ச்சலால் கிளாஸ்கோ பூங்காவில் பன்னிரண்டு அன்னப்பறவைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி-20 உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ வழங்கினார்.

உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை சீனா பணியமர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.