டெல்லியில் இளம்பெண் 35துண்டுகளாக வெட்டி கொலையான சம்பவத்தில், திடுக்கிடும் தகவல்கள்… புதுகாதலியுடன் வீட்டிற்கு வந்த கொலையாளி…

டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி  கொலையான சம்பவத்தில், கொலையாளி அல்தாப், கொலை நடைபெற்ற வீட்டுக்கு புதிய காதலியுடன் வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தலைநகர் டெல்லியில் 26 வயது இளம்பெண் ஒருவர் தான் காதலித்தவனை திருமணம் செய்ய முடிவு செய்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, அவரது காதலன் அந்த இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளான்.  மேலும், அவரது உடலை   35 துண்டுகளாக வெட்டி  குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு,  தலைநகரின் வெவ்வேறு இடங்களில் உடல் உறுப்புகளை  வீசியுள்ளார். இந்த உடல் பாகங்களை 18 நாட்கள் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வீசியுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண்ணின் காதலன் அல்தாப் என்பவன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவனிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  விசாரணையின் கொலையாளி பெயர் அப்தாப் அமீன் என்பதும், கொலை செய்யப்பட்ட அவரது காதலி பெயர் ஷ்ரத்தா என்பதும் தெரிய வந்துள்ளது.  இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளதும், மும்பையில் Bumble என்ற டேட்டிங் ஆஃப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவந்துள்ளனர்.

ஷ்ரத்தா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அப்தாப்பிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அப்தாப் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.. இதில் இருவருக்கும் இடையே தகாராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 18ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்துள்ளது. ஆத்திரத்தில், ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்து அல்தாப் கொலை செய்தததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து ஷரத்தாவின் உடலை மறைக்க 35 துண்டுகளாக வெட்டியதுடன், அநத  உடலை மறைத்து வைக்க 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட  பிரிட்ஜ் ஒன்றை புதிதாக அப்தாப் வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து தினசரி இரண்டு பாகங்களை எடுத்துச்சென்று, டெல்லியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளதும், தொடர்ந்து, 18 நாள்கள் இரவு 2 மணிக்கு பின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று, அந்த உடல் பாகங்களை ஆங்காங்கே வீசியதும், புதைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாங்களை குற்றவாளியைக் கூட்டிக்கொண்டு காவல்துறையினர் தேடி வரும் நிலையில், பல துண்டுகள் மாயமாகி உள்ளது. அது, விலங்குளால் உண்ணப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையில், அல்தாப்  தனது புதிய காதலி ஒருவரை  வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  ஷரத்தாவை கொலை செய்த அடுத்த 15 – 20 நாள்களில், மற்றொரு பெண்ணை அதே Bumble டேட்டிங் ஆஃப் மூலம் தொடர்புகொண்டு, அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணிற்கு அப்தாப் மீது எவ்விதமான சந்தேகமும் எழவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,  தொழில்முறை சமையல்காரனான அப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்தபின், ரத்தக்கறை, உடல் பாகங்கள் ஆகியவற்றை எப்படி டிஸ்போஸ் செய்வது என்பதை கூகுள் மூலம் தேடி அறிந்துள்ளார் என கூறப்படுகிறது. ஷ்ரத்தாவை வெட்ட பயன்படுத்திய கத்தியை போலீசார் இன்னும் தேடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தனது கொலையை மறைக்க, ஷ்ரத்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை இவரே பயன்படுத்தி, ஷ்ரத்தாவின் நண்பர்களுடன் ஷ்ரத்தாவை போன்ற சாட் செய்து வந்துள்ளார். தொடர்ந்து, அவர் நண்பர்களுக்கு சந்தேகம் எழவே, இரண்டு மாதங்களுக்கு மேலாக போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.