தேவையில்லாத அலைபேசிகள் வருகிறதா? TRAI கொண்டுவரும் புதிய திட்டம்!

போன் பயன்படுத்தும் அனைவர்க்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது தேவையில்லாத அலைபேசிகள் வருவது. நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் இந்த தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்கமுடிவதில்லை.

நம்மை எப்படியாவது அந்த அலைபேசிகளை எடுக்கவைத்துவிடுகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க மக்கள் பல ஆப், DND போன்ற பல சேவைகளை பயன்படுத்தினாலும் இவற்றை தவிர்க்கமுடிவதில்லை.

இதற்கு முடிவு கட்ட தற்போது இந்திய தொலைத்தொடர்பு துறை அமைப்பான TRAI ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதை அமல்படுத்தினால் இனி நம்மை தொலைபேசியில் யார் அழைக்கிறார்கள் என்ற பெயர் நமக்கு தெரியும்.

இவ்வாறு நாம் தெரிந்துகொள்ள KYC முறை பயன்படுத்தப்படுகிறது. நமக்கு வரும் அலைபேசிகள் பெயரை நாம் தெரிந்துகொள்வதால் தேவையில்லாமல் ஏமாற்றப்படாமல், தெரியாத நபர்களின் அலைபேசிகளை எடுக்காமல் தவிர்க்கலாம்.

இந்த திட்டம் மூலம் இவ்வாறான அலைபேசிகளை முற்றிலும் நிறுத்தமுடியாது என்றாலும் குறைக்கமுடியும். இந்த திட்டம் அமல்படுத்தியவுடன் நமக்கு அழைப்பு வந்தால் யார் அழைப்பது அல்லது அந்த சிம் யார் பெயரில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தற்போதுவரை Truecaller போன்ற செயலிகள் மக்கள் பயன்டுத்தி வருகின்றனர். ஆனால் இது மொத்தமாக மக்களிடம் இருந்து எடுக்கப்படும் தரவுகள் அடிப்படையில் நமக்கு பெயரை காட்டும் என்பதால் இதில் உண்மையாக அழைப்பது யார் என்று சில நேரங்களில் நமக்கு தெரியாது.

இதனால் இந்த TRAI திட்டம் நம்பிக்கையான திட்டமாக இருக்கும். பலர் இந்த திட்டத்தால் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் தெரியவரும் என்றும் இது தவறு என்றும் கூறிவந்த நிலையில் அவற்றை எல்லாம் புறம் தள்ளி இந்த திட்டத்தை TRAI செயல்படுத்தவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.