பழனியில் அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தினை தொடங்கி வைக்தார். பழனியில்,  ரூ. 3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று காலை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்கட்டமாக  கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து படிப்படியாக மற்ற பள்ளிகளிலும்  காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று  பழனி தண்டாயுத பாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள் நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி, மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற பெயர் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரையில் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறிய முதல்வர் மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார். இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.