ஜெருசேலம் : ஜெருசேலம் நகரில், பாலஸ்தீனியர் ஒருவர் இரண்டு இஸ்ரேலியர்களை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிக்கையில் மற்றொரு இஸ்ரேலியர் மீது காரை மோதி கொன்றார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசேலம் நகரின் மேற்கு கரைப் பகுதியில் உள்ள குடியிருப்பில் நுழைந்த பாலஸ்தீனியர் ஒருவர், அங்கிருந்த இஸ்ரேலியர்களை கத்தியால் தாக்கினர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் அங்கிருந்த ஒரு காரை திருடி தப்பித்து சென்றார். வழியில் ஒரு இஸ்ரேலியர் மீது மோதினார். இதில் அவரும் உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற பாலஸ்தீனியரை அங்கிருந்த இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement