பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் குறைவில்லாமல் போட்டியாளர்கள் எடுத்துச் செல்வதால், பிக்பாஸ் செம ஹிட் அடித்துள்ளது. பார்வையாளர்களுக்கு காரம் குறையாமல் இருக்கும் வகையில் டாஸ்குகளையும் அதற்கேற்ப கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ். போட்டியாளர்களும் டாஸ்குகளில் புகுந்து தாறுமாறாக விளையாடிக் கொண்டிருகின்றனர். அதேநேரத்தில் சில போட்டியாளர்கள் விதிமீறல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வார எபிசோடில்கூட கமல்ஹாசன் கடுமையாக விதிமீறல்களை எச்சரித்தார். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவார்கள் என்றுகூட நேரடியாக போட்டியாளர்களிடம் கூறினார். அவர் கூறி சில நாட்கள் கூட கடக்காத நிலையில், பிக்பாஸின் மிகப்பெரிய விதிமீறல் புகாரில் சிக்கியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன்.
Bigg Boss took away Manikanta’s shoe after he revealed it has Bluetooth connectivity.
#BiggBossTamil6 pic.twitter.com/WJNlSpedTl
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 15, 2022
அவர் ப்ளூடூத் கனெக்ஷன் கொண்ட ஷூவை பிக்பாஸ் வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால், பிக்பாஸ் டீம் அதனை நோட் பண்ணவில்லை. மணிகண்டனே தன் ஷூவில் ப்ளூடூத் இருப்பதை சக போட்டியாளர்களிடம் தெரிவிக்கும்போது தான், இந்த விஷயம் பிக்பாஸ் டீமுக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியாக அவருடைய ஷூவை பிக்பாஸ் டீம் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றது. இது கடுமையான விதிமீறலுக்குரிய செயல் என்பதால், அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் பிக்பாஸ் டீம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது விரைவில் தெரியவரும்.