தர்மபுரி மாவட்டத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மாரண்டஅள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ரூபாய் 3.26 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் இம்ரான் (24) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து விசாரணையில் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் தப்பி ஓடிய சந்தோஷ்குமார் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.