பெண்ணின் சடலத்துடன் வீடியோ: நபர் சொன்ன வார்த்தை- நடுநடுங்க வைக்கும் சம்பவம்


இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், பெண் ஒருவரை கொலை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்த நபர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவான நபர்

குறித்த சம்பவம் ஒருவாரத்திற்கு முன்னரே நடந்துள்ளதாகவும், ஆனால் தொடர்புடைய நபரை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

பெண்ணின் சடலத்துடன் வீடியோ: நபர் சொன்ன வார்த்தை- நடுநடுங்க வைக்கும் சம்பவம் | Man Posts Video With Body

@bharattime

முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட பெண் 25 வயதான ஷில்பா ஜாரியா எனவும், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர் அபிஜித் படிதார் எனவும் தெரிய வந்துள்ளது.

ஜபல்பூரில் உள்ள மேக்லா ரிசார்ட்டில் உள்ள அறையில் இருந்து கொல்லப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது.
சமூக ஊடகத்தில் அபிஜித் வெளியிட்ட காணொளியில், யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்து விடாதே என கூறும் அபிஜித், பின்னர் போர்வை ஒன்றை விலக்கி, ரத்த வெள்ளத்தில் காணப்படும் பெண்ணின் சடலத்தை காட்டுகிறார்.

ஷில்பா ஜாரியா ரகசிய உறவில்

இன்னொரு காணொளியில், பாட்னா பகுதியை சேர்ந்த வணிகர் தாம் எனவும், ஜிதேந்திர குமார் என்பவருடன் இணைந்து தொழில் செய்து வருவதாகவும், தங்கள் இருவருடனும் ஷில்பா ஜாரியா ரகசிய உறவில் இருந்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்ணின் சடலத்துடன் வீடியோ: நபர் சொன்ன வார்த்தை- நடுநடுங்க வைக்கும் சம்பவம் | Man Posts Video With Body

@bharattime

மேலும், ஜிதேந்திராவிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் கடனாக பெற்ற ஷில்பா, பின்னர் ஜபல்பூருக்கு தப்பியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜிதேந்திரா கூறியதை அடுத்தே ஷில்பாவை தேடிச் சென்று கொலை செய்துள்ளதாக அபிஜித் காணொளியில் கூறியுள்ளார்.

தற்போது ஜிதேந்திராவும் அவரது உதவியாளரான சுமித் என்பவரும் பிஹார் பொலிசாரால் கைதாகியுள்ளனர்.
இதுவரை அபிஜித் சிக்காத நிலையில், பொலிசார் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தனிப்படையை அனுப்பியுள்ளனர்.

கண்காணிப்பு கமெராவில்

ஷில்பாவின் சடலம் மீட்கப்பட்ட மேக்லா ரிசார்ட்டில் அபிஜித் மட்டுமே தங்கியிருந்துள்ளார்.
அடுத்த நாள், ஷில்பா அவரை சந்திக்க சென்ற நிலையில், மதியம் அவர்கள் உணவு வரவழைத்துள்ளதும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அபிஜித் மட்டும் அறையை பூட்டிவிட்டு வெளியேறுவதும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

பெண்ணின் சடலத்துடன் வீடியோ: நபர் சொன்ன வார்த்தை- நடுநடுங்க வைக்கும் சம்பவம் | Man Posts Video With Body

@bharattime

நவம்பர் 8ம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் மேக்லா ரிசார்ட் ஊழியர்கள் குறித்த அறைக் கதவை உடைத்து பார்க்கையில், பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில், தம்முடன் வசித்து வந்த பெண்ணை கொலை செய்து, உடலை 30 துண்டுகளாக வெட்டி, 18 நாட்களில் மறைவு செய்த இளைஞரின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி அடங்கும் முன்னர், தற்போது இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.