மதுரை: மணல் கடத்தல் லாரியை விடுவிக்காத இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த அடைக்கலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மணல் கடத்தியதாக கடந்த 2014ல் பாளை போலீசார் வழக்கு பதிந்து, எனது லாரியை பறிமுதல் செய்தனர். ரூ.10 ஆயிரத்தை அபராதமாக பெற்றுக்கொண்டு லாரியை விடுவிக்க வேண்டுமென கடந்த 2015ல் உத்தரவானது.
இதற்காக அப்போதைய இன்ஸ்பெக்டர் சபாபதி ரூ.2 ஆயிரத்தை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு அபராதமாக செலுத்த வேண்டும். மனுதாரருக்கு ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக கொடுக்க வேண்டும். மனுதாரரின் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.