மன்னார் மறைமாவட்ட ஆயர் ,ஜனாதிபதியை சந்தித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தனர்.

மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை ஜொய்ஸ் பெப்பி சொசாய் (Joyce Peppi Sosai Santia) அருட்தந்தை ஆண்டனி சொசாய் (Antony Sosai) உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
President’s Media Division

மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.