ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக, உக்ரைனில் சுமார் பத்து மில்லியன் மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ், லிவிவ், ரிவ்னே மற்றும் கார்கீவ், ஒடேசா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும், மின் உற்பத்தி நிலையங்களிலும் ரஷ்யா அதிகளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில், இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள பல அணு உலைகள், தானியங்கி முறையில் இயக்கத்தை நிறுத்தியதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். தற்போது படிப்படியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.