ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு… நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் – வழக்கில் நடந்தது என்ன?!

டெல்லி நீதிமன்றத்தில் நடந்த ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று பிற்பகலில் ஆஜரானார். தொழிலதிபர் மனைவியை மிரட்டி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஜாக்குலின் வெளிநாடு செல்ல முடியாமல் அமலாக்கப்பிரிவு தடை விதித்துள்ளது. இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. ஜாக்குலின் இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் அவருக்கு ஏற்கனவே இடைக்கால ஜாமீன் கொடுத்திருந்தது. அதேசமயம் அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து வந்தது.

குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் விசாரணையின் போது கேள்வி எழுப்பி இருந்தது.

நேற்று பிற்பகலில் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. இதனால் ஜாக்குலின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அவருக்கு நீதிமன்றம் நிரந்தர ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ.2 லட்சம் உத்தரவாத தொகையை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு பிறகு ஜாக்குலின் கோர்ட்டில் இருந்து வெளியில் வந்தார். உடனே ரசிகர்கள் ஜாக்குலினை சூழ்ந்து கொண்டனர். ஜாக்குலின் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸார் சூழ்ந்து கொண்டு ஜாக்குலினை மீட்டுக்கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் வருத்தம் அளிப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இது போன்று நடந்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜாக்குலின் நடிப்புக்காக இந்தியாவில் தங்கி இருக்கிறார். சுகேஷுடனான புகார் வெளிச்சத்திற்கு வந்த பிறகு பாலிவுட்டில் முக்கிய பிரபலங்கள் ஜாக்குலினை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.