விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் தர தமிழக அரசு மறுப்பு: கவர்னர் தமிழிசை தகவல்| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாகன ஆலோசனைக் கூட்டம் நேற்று மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து துறை தலைவர்களும், தங்கள் துறைகளுக்கு தேவையான கருவிகள், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது. சிறப்பு மருத்துவர்கள் எத்தனை பேர் வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் 11 அறுவை சிகிச்சை அரங்கங்கள் தயாராக இருந்தும் பயன்படுத்தாமல் உள்ளது. இன்னும் 6 மாதங்களில் அறுவை சிகிச்சை அரங்கங்கள் முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்காக விதிகளை தளர்த்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதாக விளம்பரம் செய்யப்படவுள்ளது. 350 கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வருமானத்தை உயர்த்துங்கள் என கூறியுள்ளது. இதற்கு வரி விதித்தால்தான் வருவாயை உயர்த்த முடியும். நீண்ட நாட்களாக வரி உயர்த்தவில்லை.

latest tamil news

விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு இடம் வழங்கவில்லை. விலை கொடுத்தே இடத்தை வாங்க வேண்டும் என்கின்றனர். விமான நிலையம் விரிவாக்கம் என்பது புதுச்சேரிக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும். எனவே விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு இலவசமாக இடத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.