தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், வட தமிழகம், மாநிலத்தின் உட்புறப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பனிமூட்டமான சூழல் தான் காணப்படும். இத்தகைய சூழலில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு இருக்கும். ஆனால் இது தென் தமிழகத்திற்கு பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ”பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்” என்ற பாடலின் வரிகளை பதிவிட்டு பனி படர்ந்த சூழலை இனி காணலாம் என்று தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் சூழல் இல்லை என்றும் தெரிய வருகிறது. அதேசமயம் தென் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பிருப்பதை அறிய முடிகிறது. எனவே மழையின் தீவிரத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
