100 குழந்தைகளை காப்பாற்றும் துல்கர் சல்மான்

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளை காப்பாற்றும் பணியை மேற்கொண்டுள்ளார். துல்கர் தனது அறக்கட்டளை மற்றும் தனது தயாரிப்பு நிறுவனமான வேபாரார் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் கைட்ஸ் அறக்கட்டளையோடு இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளார்.

'Wayfarer's Tree of Life' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், 100 ஏழை குழந்தைகளுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. குழந்தைகளில் சிறுநீரகம், குடல் மற்றும் இருதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த திட்டம் மூலம் உதவி செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கான லோகோவை துல்கர் சல்மான் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் தனது அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.