இம்முறை வரவுசெலவுத் திட்டம் பாரம்பரியமானதன்றி, பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் தக்க வைத்துக் கொள்வதற்கே வழிகாட்டுகின்றது.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கும் போது, பொருளாதாரத்தின் தன்மையை நிலையாகப் பேணத்தக்கதாக காணப்படுகிறது.
இவ்வரவு செலவுத் திட்டம் சம்பிரதாயமானதன்றி ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும்; பாதுகாக்கக் கூடியதாக மாற்றும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
‘2023 தேசிய வரவு செலவுத் திட்டம் தொடர்பாக பிந்திய கருத்துக்களம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று (15) விசேட சபையின் கலந்துரையாடலில் பங்குபற்றி ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நாட்டை சகலருக்கும் சௌபாக்கியமானதாக மாற்றுவதற்கு பொருளாதாரத்தை நிலையானதாக மாற்றுவது தொடர்பில் புதிய வழிமுறைகளை இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக வழங்குவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிலைமையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி வழிகாட்டுவதாக இத்திட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
பல வருடங்காளாக வரவு செலவுத் திட்டத்தின் இடைவெளி காணப்பட்டதாகவும், இது தற்போது செலுத்தப்படவிருக்கும் கடன் தொகையும், அதில் செலுத்தக்கூடிய இயலுமை குறைந்து கடன் தளம்பல் ஏற்பட்டதாகவும், கடனை வழங்கியவர்களுடன் கலந்துரையாடி கடனை மீள்திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
இவ்வாறான சிந்தனைகளால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையைத் தடுப்பதற்கு இவ்வரவு செலவுத் திட்டம் உதவும். அத்துடன் இத்திட்டம் அரசினால் பொருளாதார உறுதிப்பாட்டை அடைவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை அன்றி அதன் ஒரு பகுதியாகும் எனவும் ஆளுநர் கூறினார்.
வெளிநாட்டுக் கடன் பெறுவதனால் நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மையை அடைவதற்கு இயலுமையின்றி, கடனற்ற பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்.
இதனால் கடனை நம்பியிராத பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் இவ்வரவு செலவுத் திட்டத்தினால் பொருளாதாரத்திற்கு பங்களிப்புக் கிடைக்கப்பெறும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Fathima Nasriya