8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்வான தகவலை வெளியிடவிருக்கும் ரிஷி சுனக்


பிரித்தானியாவில் 8 மில்லியன் குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கான ஊக்கத்தொகையுடன் தேசிய ஊதிய உயர்வையும் பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைச் செலவு

இதனால் 8 மில்லியன் பிரித்தானியர்களுக்கு வாழ்க்கைச் செலவு தொகையாக 1,100 பவுண்டுகள் வரையில் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் வறியவர்களை ஆதரிக்கும் பொருட்டு, பிரதமர் ரிஷி சுனக் குறித்த திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்.

8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்வான தகவலை வெளியிடவிருக்கும் ரிஷி சுனக் | Rishi Sunak Cost Of Living Boost Eight Million

@Credit: simondawson

தொடர்ந்து தேசிய ஊதியத்தில் உயர்வை ஏற்படுத்தவும் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது, மணிக்கு 9.50 பவுண்டுகள் என இருக்கும் ஊதியமானது 10.40 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

கூடுதல் நிதி உதவி

இதனால், பிரித்தானியாவில் உள்ள 2.5 மில்லியன் மக்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி, தற்போது யூனிவேர்சல் கிரெடிட் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அதிக முக்கியத்துவம் அளிப்பார் எனவும், மேலும் சில குடும்பங்களுக்கு மூன்று கூடுதல் நிதி உதவிகளை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது வாழ்க்கை செலவு தொகையாக 650 பவுண்டுகளும், ஊனமற்றவர்களுக்கு 150 பவுண்டுகளும், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு 300 பவுண்டுகள் தொகையும் வழங்க திட்டமிட்டிருக்கிறார்.

8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு மகிழ்வான தகவலை வெளியிடவிருக்கும் ரிஷி சுனக் | Rishi Sunak Cost Of Living Boost Eight Million

@Credit: simondawson

இதனால் சில குடும்பங்கள் 1,100 பவுண்டுகள் வரையில் இந்த குளிர் காலத்தில் பெறவிருக்கிறார்கள்.
மேலும், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிசக்தி செலவினங்களை ஈடுகட்ட, செப்டம்பர் முதல் பல குடும்பங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் கொடுப்பனவுகளின் தொடர்ச்சியாக இவை இருக்கும் என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த நெருக்கடி

இதனிடையே, புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ் கவுன்சில் வரி முதன்முறையாக 2,000 பவுண்டுகளுக்கு மேல் உயர உள்ளது.
இது மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு அடுத்த நெருக்கடியை அளிக்கும் என்றே கூறப்படுகிறது.

புதிய திட்டங்களின் கீழ் குடும்பங்கள் ஒவ்வொன்றும் மாதத்திற்கு சராசரியாக £100 கவுன்சில் வரி உயர்வை எதிர்கொள்ளும் என்றே தெரியவருகிறது.
மேலும், Band H வரிசை குடியிருப்பு உரிமையாளர்கள் 200 பவுண்டுகள் கூடுதலாக வரி செலுத்தும் நிலையும் உருவாகலாம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.