The Non-Resident சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

2022 நவம்பர் 13 முதல் 18 வரையான இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சிங்கப்பூரின்The Non-Resident   உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்திர தாஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 நவம்பர் 15, செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் தாஸ் இருவரும் கலந்துரையாடினர். சிங்கப்பூரின் வணிகப் பிரதிநிதிகள் குழுவொன்றும் உயர்ஸ்தானிகருடன் இதன்போது இணைந்திருந்தனர். சிங்கப்பூரில் இருந்து சாத்தியமான முதலீடு மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புக்கள் மற்றும் பகுதிகள் குறித்து அமைச்சர் இதன்போது விளக்கினார்.

இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை சந்தித்த உயர்ஸ்தானிகர் தாஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி, முதலீடு மற்றும் சுற்றுலா தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

அதிமேதகு ஜனாதிபதி, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், முதலீட்டு சபையின் தலைவர் மற்றும் இலங்கை வர்த்தக சபையினரையும் உயர்ஸ்தானிகர் தாஸ் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 நவம்பர் 16

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.