உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன்..வெளியான விபரம்


கத்தாரில் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவுக்கான பரிசுத்தொகை விபரம் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட விளையாட்டு தொடர்

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 20ஆம் திகதி தொடங்குகிறது. சர்வதேச அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு போட்டி தொடர் இதுவாகும்.

இதுவரை பிரேசில், ஜேர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே, ஸ்பெயின், இங்கிலாந்து 8 அணிகள் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ளன.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன்..வெளியான விபரம் | Qatar World Cup Football Prize 2022

[Sorin Furcoi/Al

இவற்றில் பிரேசில் 5 முறையும், ஜேர்மனி மற்றும் இத்தாலி தலா 4 முறையும், அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.

இம்முறை கத்தாரில் நடக்கும் போட்டிகள் மொத்தம் 8 மைதானங்களில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன்..வெளியான விபரம் | Qatar World Cup Football Prize 2022

SUPREME COMMITTEE VIA GETTY IMAGES

மிகப்பெரிய பரிசுத்தொகை

மொத்தம் 440 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகை ஆகும். இதில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 42 மில்லியன் பரிசாக கிடைக்கும்.

இறுதிப் போட்டியில் தோல்வியுறும் அணிக்கு 30 மில்லியன் டொலர்களும், மூன்றாவது, நான்காவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே 27 மில்லியன், 25 மில்லியன் டொலர்களும் கிடைக்கும்.

கால் இறுதி சுற்று வரை வரும் அணிகளுக்கு 17 மில்லியனும், ரவுண்ட் ஆஃப் 16 சுற்று வரை வரும் அணிகளுக்கு 13 மில்லியனும், குரூப் ஸ்டேஜ் அணிகளுக்கு 9 மில்லியனும் கிடைக்கும். 

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன்..வெளியான விபரம் | Qatar World Cup Football Prize 2022



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.