எரிவாயு தட்டுப்பாட்டுக்கு காரணத்தை வெளிப்படுத்திய முகவர் நிலைய உயர் அதிகாரி (Video)


எரிவாயு தட்டுப்பாடு, மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஏற்படுகின்றது என கல்முனை பிராந்திய எரிவாயு முகவர் நிலைய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை – கல்முனை பிராந்தியத்தில் உள்ள பெரியநீலாவணை, மருதமுனை, மணல்சேனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது மற்றும் சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சடுதியாக லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவியிருந்தன.

எரிவாயு தட்டுப்பாடு

மக்கள் விறகு அடுப்புகளை பாவித்து வரும் நிலையில் மழை காரணமாக அவ்வடுப்புகளை கைவிட்டு எரிவாயு அடுப்புகளில் நாட்டம் கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிர்ப்பந்தம் காரணமாகவும் ஒரே நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து எரிவாயுக்கான கேள்விகளும் அதிகரிப்பதனால் எரிவாயு தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன.

மேலும் எமது நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட சுமார் 1000இற்கும் அதிகமான எரிவாயு கொள்கலன்களை ஒவ்வொரு நாளும் வாகனங்களில் ஏற்றப்பட்டு விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் செயற்கை தட்டுப்பாடு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது.

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு காரணத்தை வெளிப்படுத்திய முகவர் நிலைய உயர் அதிகாரி (Video) | Comment Of Gas Agency Commissioner Regarding

எரிவாயுக்கான விலைக்குறைப்பு

அத்துடன் எரிவாயுக்கான விலைக்குறைப்பு தொடர்பான அறிவித்தலை நம்பி இருந்து சுயநலமாக செயற்பட்ட மக்கள் அதன் பின்னர் திடீரென எரிவாயுவை கொள்வனவு செய்த செயற்பாடும் தட்டுப்பாடு நிலவ மற்றுமொரு காரணமாகும்.

இது தவிர 12.5 கிலோ கிராம் 5.0 மற்றும் 2.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சீராக விநியோகிக்கப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.