பிரித்தானியாவின் பெர்க்ஷிரேவில் இளவரசி கேட் மிடில்டன், உக்ரேனிய குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
உக்ரேனியர்களின் வேதனை
ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்வதால் உக்ரைனில் இரண்டு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் பலர் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் பெர்க்ஷயரில் உள்ள மையத்தில் இருக்கும் உக்ரேனிய குடும்பங்களை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
@Jason Dawson
அப்போது உக்ரேனிய பெண்கள் சிலர் இளவரசியிடம் தங்கள் அனுபவித்த வேதனைகளை கூறினர்.
கலினா என்ற பெண் கீவ்வில் ரஷ்ய குண்டுகளில் இருந்து தப்பிக்க ஒளிந்து கொண்ட பயங்கரமான கதையை விவரித்தார்.
@PA
உக்ரேனிய பெண்களின் சோக கதைகளை கேட்டு ஆறுதல் கூறிய கேட், அவர்களின் குழந்தைகளுடன் அமர்ந்து படம் வரைவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார்.
@PA
தாயாக மாறிய கேட்
மேலும் அவர் உக்ரேனியர்களிடம் பேசும்போது, ‘உங்களுக்கு அன்பானவர்களும், குடும்பத்தினரும் உக்ரைனில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் போரின் கொடூரங்களை இன்னும் பார்க்கிறார்கள்.
உங்களது துணிச்சலினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், நீங்கள் அனைவரும் எவ்வளவு வலிமையாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டு நான் வியப்படைகிறேன்’ என பாராட்டினார்.
@PA
அத்துடன், நாங்கள் செய்யக்கூடியது மிகக் குறைவானது. இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிறோம் என கேட் கூறினார்.
தங்கள் இன்னல்கள் குறித்து உக்ரேனிய பெண் ஒருவர் விவரித்தபோது கண்ணீர் விட்டு அழுதார். அவரை இளவரசி கேட் தாயைப் போல அரவணைத்து ஆறுதல் கூறினார்.
Shcherbyna என்ற பெண், அவநம்பிக்கையான சூழ்நிலையில் தனது பிள்ளைகளுடன் வந்ததாகவும், இங்கு வந்ததும் மீண்டும் வாழ ஆரம்பித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
@Jason Dawson
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேட்டின் பெற்றோர், புலம்பெயர்ந்த உக்ரேனியர்களை பெர்க்ஷயர் வீட்டிற்கு வரவேற்க விரும்புவதாக தெரிவித்தனர்.
உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் ஒரு குடும்பத்திற்கு, ஏழு படுக்கையறைகள் கொண்ட Bucklebury Manor-யில் ஒரு வாழ்க்கை அறையை தனித்தனியாக மாற்றுவது பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.