கலகத் தலைவனை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

தடையறத் தாக்க, மீகாமன், தடம் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத் தலைவன் என்ற படத்த இயக்கியிருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், உள்ளிட்டோரும் பங்கேற்றனர். படமானது நாளை (நவம்பர் 18) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “லகத் தலைவன் படத்தைத் தொடங்கி மூன்று வருடங்களுக்கு வெளியாகிறது. ஆனால் நான் 70 நாள்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். இத்தனை நாள்கள் ஆனதால் இந்தப் படத்தில் நடித்ததையே மறந்துவிட்டேன். இதற்கு பிறகு தொடங்கிய நெஞ்சுக்கு நீதி படமே வெளியாகிவிட்டது. கலகத் தலைவன் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் வெற்றி பெறும்.

சண்டைக் காட்சிகளில் என்னைவிட அதிகம் அடிவாங்கியது நிதி அகர்வால்தான். மிஷ்கினின் முதல் படத்தில் நான் நடிக்க வேண்டியது. பின்னர்தான் சைகோ படத்தில் நடித்தேன். ஆனால் பாதி பகுதிகளில் அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. என்னை மாதிரி உடலமைப்பு இருப்பவர்களை வைத்து படம் எடுத்துட்டாங்க. அதுதான் உண்மை. டப்பிங்கில்தான் எனக்கு அது தெரிந்தது.

மகிழ் திருமேனி படங்களில் எப்போதும் பரபரப்பு இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும். தமிழ் சினிமாவை நான் தூக்கி பிடிக்கிற மாதிரி நடிப்பதை விட்டுடாதீங்கனு பலரும் சொல்கீறார்கள். ஆனால் நான் நடிப்பதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் நடிக்க தொடங்கவே இல்லை. என்னுடைய நடிப்பைப் பற்றி மாரி செல்வராஜிடம் கேட்டால் தெரியும். மாமன்னன் ஆரம்பித்த சமயத்தில் நான் அவரிடம் சென்று என் நடிப்பைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர் ‘இருங்க சார் இன்னும் ஒரு பத்து நாள்கள் போகட்டும். பார்த்துட்டு சொல்கிறேன்’ என்றார். அப்படித்தான் எனது நடிப்பு இருக்கும்” என்று பேசினார் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.