கழிவு நீர் தொட்டியில் மேலும் ஒரு பிணம்.. அதிர்ச்சியில் ஸ்தம்பிக்கும் கரூர் நகரம்.! 

கரூர் மாவட்ட பகுதியில் உள்ள காந்தி நகரில் குணசேகரன் என்பவரின் புதிய வீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னர் கழிவுநீர் தொட்டியானது கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் உள்ள சவுக்கு மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றுவதற்காக அந்த தொட்டியில் மோகன்ராஜ் மற்றும் ராஜேஷ் என்ற தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தொட்டியில் இருந்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகுமார் என்கிற மற்றொரு கட்டிட தொழிலாளியும் உள்ளே இறங்கி உள்ளார். இதனையடுத்து மூன்று பேரும் மயக்கம் அடைந்து உள்ளனர். இதனையடுத்து கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு , மூன்று பேரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என கூறினார். இதன்படி நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எட்டு அடி உயரம் கொண்ட தொட்டியில் முழங்கால் அளவு தண்ணீரில் சவுக்கு குச்சிகள் உப்பி தேங்கிய நிலையில் இருந்ததால், நீரில் விஷ வாயு உருவாகி இருக்க கூடும என கருதப்படுகிறது. இதுகுறித்து கட்டிட உரிமையாளர் மற்றும் கட்டிட மேஸ்திரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அதே கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த சின்னமலைபட்டி கிராமத்தில் வசித்து வந்த கோபால் என்கிற இளைஞர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் அவரது சகோதரர் அவரை தேடி கொண்டு நேரடியாக வந்து கட்டிடத்தில் பார்த்துள்ளார். 

அவருடைய செருப்பு மட்டும் அங்கே இருந்த நிலையில், அவரை காணவில்லை. மேலும் இது குறித்து காவல்துறைக்கு சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்பு துறையினர் அங்கே வந்து உள்ளே பார்த்தபோது கோபால் உள்ளே இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஏற்கனவே 3 நபர் இறந்த நிலையில், மேலும் ஒருவர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கழிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பைப் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.