காமராஜர் பல்கலை.,யில் தொல் மரபியல் ஆய்வகம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் ரூ. 3.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொல் மரபியல் துறை மற்றும் ரூசா நிதி உதவியுடன் தொல் மரபியல் ஆய்வகம், நுண் உயிரியல் ஆய்வகம் தொடக்க விழா நேற்று நடந்தது. பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் தலைமை வகித்தார். பல்கலை பதிவாளர் சிவகுமார் வரவேற்றார். ஆய்வகங்களை தமிழக நிதி அமைச்சர் பிடி. பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பேசினார்.

அதில், “பண்டய பழமையை அறிய மிக உயரிய ஆய்வகம் அமைத்த பல்கலைகழகத்திற்கு வாழ்த்துக்கள்.

எனது தாத்தா பிடி ராஜன் மற்றும் மாமா பக்தவச்சலம் சென்னை மாகாண முதல்வராக இருந்து, இந்த நிறுவனத்திற்கு பங்கற்றியுள்ளனர். உயரியல், நுண் உயிரியல் படிப்புகளின் ஆய்வகத்தின் மூலம் பண்டைய கலாச்சார, பொருளாதார ,வாழ்வு நிலை விளக்கும். ஆய்வுகள் மற்றும் பழைய மரபுகளை புதிய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் ஆராய்ச்சி களில் இன்றைய நிலவரம், பாடநூல்கள் மூலம் வரலாற்றில் இடம் பெறும். இந்த ஆய்வகத்தின் மூலம் பண்டைய மனிதன், விலங்குகள், தாவர மரபணுக்களை பகுப்பாய்வு செய்யலாம்.

பண்டைய நுண் உயிரியல் துகள்களை ஆய்வு செய்யலாம். கோவிட் 19 போன்ற நோய்களுக்கு ஆய்வின் மூலம் புதிய மருந்துகள் கண்டு பிடிக்க வும், நவீன நுண் உயிரியல் ஆய்வக வசதி உள்ளது. ஆய்வகம் மற்றும் பகுப்பாய்வு முடிவுகள், கலந்தாய்வு வசதிகளுக்காக சிகாகோ பல்கலைக்கழகம், லக்னோ பீர்பால் சஹானி பல்கலை கழகத்துடன் இணைந்து காமராஜர் பல்கலை ஆய்வு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.