ஜோஷ் முதல் பிக்பாஸ் வரை… ஜி.பி.முத்துவின் அசுர வளர்ச்சி!!

ஒரு நபர் பெரும்பாலான மக்களால் விரும்பக்கூடியவராக இருப்பது மிகவும் கடினம். ஒருசிலர் தான் அத்தகைய வரத்தை பெற்றிருப்பார்கள். அந்த வரிசையில் வருபவர் ஜி.பி.முத்து. அவரது வெள்ளந்தி குணத்திற்காகவே கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் முதன்முதலில் கவனம் ஈர்த்த ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் உழைக்கவும், சாதிக்கவும் படிப்பு தடை இல்லை என்பதை உணர்ந்த ஜிபி முத்து, நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

வியாபாரம் கற்றுக் கொண்டு, 10 வருடத்திற்கு பிறகு சொந்தமாக கடையை தொடங்கினார். பின்னர் திருமணம் செய்து கொண்ட அவர் வேறு ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அப்போது துரதிஷ்டவசமாக அவரது அண்ணன் ஒரு விபத்தில் இறந்துபோகவே, சகோதரனின் குழந்தைகளையும் இவரே கவனித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து ஜிபி முத்து, சின்ன சின்ன வீடியோக்கள் கிரியேட் செய்து அவற்றை இணையத்தில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். டிக்டாக் போன்ற செயலிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டதால்தான் ஜிபி முத்து இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

அவர் பேசும் “செத்த பயலே… நாரப் பயலே…” போன்ற வசனங்கள் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. அப்போது டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து, ஜோஷ் செயலி மூலம் வீடியோ வெளியிட்டு, குறைந்த நாட்களில் அதிக ரசிகர்களை பெற்றார்.

திறமையுடன், நல்ல மனமும் கொண்ட ஜிபி முத்து போன்றவர்கள் அடையாளம் பெற ஜோஷ் மிகச்சிறந்த இடம். ஜோஷ் செயலி ஏராளமானோர் புகழ் வெளிச்சம் பெற காரணமாக இருந்து வருகிறது. அப்படி பிரபலமடைந்தவர்களில் ஜிபி முத்துவும் ஒருவர்.

நகைச்சுவை உணர்வுடன் ஜிபி முத்து வெளியிடும் வீடியோக்களால் அவருக்கு சுமார் 15 லட்சம் ரசிகர்கள் ஜோஷ் செயலியில் உள்ளனர். அவர் தொடர்ந்து ஜோஷ் செயலியை பயன்படுத்தி வருகிறார். அதில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அதிலும் ஜோஷ் செயலியில் உள்ள லைவ் வசதி அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

ஜோஷ் செயலியில் ரசிகர்கள் அவர் மீது அன்பை பொழிந்து கொண்டிருந்த போது தான் அவருக்கு பிக் பாஸ் சீசன் 6இல் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பிக் பாஸ் சீசன் 6இன் முதல் போட்டியாளர் அவர்தான்.

அவரது பயணத்தில் அடுத்ததாக திரைத்துறையிலும் கால் பதித்துள்ளார். பல படங்களில் நடித்து வரும் ஜிபி முத்து, பிரபல நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் விழாவில் சன்னி லியோனுடன் கலந்து கொண்ட புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

கிடைக்கும் வாய்ப்புகளை பலரும் தவறவிடும் இன்றைய காலகட்டத்தில், ஜிபி முத்து கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.