தங்கம் விலை இனி குறைய வாய்ப்பில்லை… இதுதான் காரணம்!

தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும் கலக்கத்தை கிளப்பியுள்ளது.

தங்க விலை உயர்வு(Gold price increase)

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4,940 ஆகவும், ஒரு பவுனுக்கு விலை ரூ.39,520 ஆகவும் இருந்தது. நேற்று மாலையில் ஒரு கிராமுக்கு தங்கத்தின் விலை ரூ.30 கூடி ரூ.4,970 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.240 கூடி விலை ரூ.39,520 ஆகவும் உயர்ந்தது. கிட்டத்தட்ட தங்கத்தின் விலை ரூ.40,000-ஐ நெருங்கிவிட்டது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும் வெள்ளியின் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.68.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.68,500 ஆகவும் இருந்தது.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி

தங்கத்தின் விலை உயர்வை பற்றி சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “உலகளாவிய பணவீக்கம்தான் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பணவீக்கம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலும் ஏற்பட்டத்தால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்தின்போது அனைத்து வளர்ந்த நாடுகளும் தங்களது மக்களுக்கு இலவசங்களை கொடுத்தது. இலவசம் என்றால் நமது நாட்டில் தருவது போன்ற ரேசன்,மருந்துகள் அல்ல. அவர்கள் மக்களுக்கு பணத்தை இலவசமாக வழங்கினர். இந்த இலவச பணம் கஜானாவில் இருந்து தராமல், அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதுதான் இன்றைய பணவீக்கத்துக்கு முக்கிய காரணம் ஆகும்.

தங்கம்

இந்த தங்க விலை உயர்வு உலகளவில் தேவை மற்றும் உற்பத்தியில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும் தொழில் வளர்ச்சி மந்தமடையும். ஆனால் இந்தியாவிற்கு அதிக சிக்கல் ஏற்படாது.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்பதால் தங்கம் விலை இனி குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

தங்கம்

என்னை பொறுத்தவரை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6,000 என்பதை விரைவில் எட்டிவிடும். அதனால் தங்க விலை குறையும் என்றும் எதிர்பார்க்காதீர்கள். மக்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு இதுவே சரியான நேரம் ஆகும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.