தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், அவர்களை காரைநகர் முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை வழங்கி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.