போலி விசாக்களைப் பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மல்லாவி மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் மூவரும் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக குடிவரவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.