நடிகர் அஜித், தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் திடீரென வாட்ஸ் அப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ளப் படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ‘மகாநதி’ சங்கர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் திரைப்படமும், வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா புரொடெக்ஷன்ஸ் பெற்றுள்ளது.
பொதுவாக தான் நடிக்கும் படங்களின் விளம்பரப்படுத்தும் விழாவிற்கு வராத நடிகர் அஜித், தனது ரசிகர்களுக்கு ஏதாவது கூறவேண்டுமென்றால், மேலாளர் சுரேஷ் சந்திரா வாயிலாக தான் சமூகவலைத்தளத்தில் தெரிவிப்பார். அந்தவகையில் தற்போது திடீரென நடிகர் அஜித், வாட்ஸ் அப்பில் அனுப்பிய கருத்தை, மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “உங்களை எப்போதும் ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவர்களை, உங்களை சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். எந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் தேவையற்ற விஷயங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள். அதிக உந்துதலுடன், உங்களது இலக்குகளை உயர்த்திக்கொண்டே செல்லுங்கள். மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுங்கள். நேர்மறை எண்ணங்கள் மட்டும் மனதில் கொள்ளுங்கள். பொறாமையோ, வெறுப்போ வேண்டாம். உங்களிடமுள்ள சிறந்ததை ஒருவொருக்கொருவர் வெளிக்கொண்டு வாருங்கள். வாழு மற்றும் வாழ விடு, எல்லையற்ற அன்புடன், அஜித்” என்று தெரிவித்துள்ளார்.
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022
இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் ‘துணிவு’ ட்ரெயிலருக்கு தயாராகுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விரைவில் ‘துணிவு’ படத்தின் ட்ரெயிலல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Thunivu trailer Vera level be ready guys #AK pic.twitter.com/QrvVxthRwK
— RK SURESH (@studio9_suresh) November 16, 2022