டெல்லி: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆறு குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வாதாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவு சட்டப்பூர்வமாக பிழையானது என்றும் மனுவில் தகவல் வெளியாகியது.
