அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து.. 21 பேர் உடல்கருகி பலியான சோகம்


பாலஸ்தீனத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பயங்கர தீ விபத்து 

காஸாவின் வடக்கே அமைந்துள்ள பகுதி ஜபாலியா. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ பற்றியுள்ளது.

சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீயானது, கட்டிடம் முழுவதும் பரவி பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 21 பேர் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த திடீர் விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த விபரம் வெளியாகவில்லை.

இதுகுறித்து அறிந்த பாலஸ்தீன ஜனாதிபதி மொஹ்மத் அப்பாஸ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து.. 21 பேர் உடல்கருகி பலியான சோகம் | 21 Killed In Palestine Fire Accident

[Mahmud Hams/

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து.. 21 பேர் உடல்கருகி பலியான சோகம் | 21 Killed In Palestine Fire Accident

[Mahmud Hams/



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.