மும்பை, மஹாராஷ்டிராவில் ஆபாசமாகப் பேசி செக்ஸ் தொல்லை கொடுத்த டிரைவரால், வேகமாகச் சென்ற ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அவுரங்காபாத் நகரில், ௧௭ வயது மாணவி ஒருவர், டியூஷன் முடிந்து வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பியுள்ளார்.
அப்போது, டிரைவர் சையத் அக்பர் ஹமீத், மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், டிரைவர் தன்னை கடத்தி ஏதாவது செய்துவிடுவார் என்று பயந்த மாணவி, வேகமாகச் சென்ற ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவியின் பெற்றோர் தந்த புகாரின் படி, போலீசார் அச்சாலையில் உள்ள ௪௦ கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சையத் அக்பர் ஹமீதை கைது செய்தனர். இவர் மீது, ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement