உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2022 FIFA World Cup ,கத்தார் நாட்டில் நாளை மறுதினம் (20( ஆரம்பமாகிறது.
போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது.முதல் போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதவுள்ளன. ஆரம்ப நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி அல் பைத் அரங்கில் நடைபெறும்.
உலக கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் நாட்டுக்கு வருகை தந்துக்கொண்டிருக்கன.
அமெரிக்காஇ ஜப்பான்இ அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன. இந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்இ இங்கிலாந்து அணிகள் தோகா சென்றடைந்தன. அந்நாட்டு வீரர்களுக்கு கத்தாரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
உலக கிண்ண போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் (16) பயிற்சி போட்டியில் விளையாடியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.