எட்டு மாத கர்ப்பிணிப் பெண் பலி! விபத்தை ஏற்படுத்திய பேருந்தை தாக்கிய பொதுமக்கள்


சென்னையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண் பேருந்து மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கர்ப்பிணிப் பெண் பலி

சென்னை காமராஜ் சாலையில் லதா என்ற 8 மாத கர்ப்பிணிப் பெண், தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, தம்பதியர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

குறித்த வாகனத்தை ஓட்டிய நபர் நிறுத்தாமல் சென்றபோது மடக்கிப்பிடித்த பொதுமக்கள், கடற்படை பேருந்தை அடித்து சேதப்படுத்தினர்.

இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

எட்டு மாத கர்ப்பிணிப் பெண் பலி! விபத்தை ஏற்படுத்திய பேருந்தை தாக்கிய பொதுமக்கள் | 8 Month Pregnant Woman Killed Accident Chennai

@dailythanthi

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டு மாத கர்ப்பினிப் பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.