நியூயார்க்ஐ.நா., பொது சபை கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்தது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பான ஐ.நா., பொது சபை கூட்டம் நேற்று முன்தினம் கூடியது.
அப்போது, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதி நிதி பேசினார். இதற்கு பதில் அளித்த ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பிரதிக் மாத்துார் கூறியதாவது:
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்கள் தொடர்பான மிக முக்கியமான கூட்டத்தில், பாகிஸ்தான் தேவையின்றி ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை எழுப்புகிறது.
ஜம்மு – காஷ்மீர் பகுதி குறித்து, பாக்., பிரதிநிதிகளுக்கு எவ்வித கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், அப்பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
மீண்டும் மீண்டும் பொய்களை பரப்பும் பாக்.,கிற்கு, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement