தமிழ் குடும்பங்களின் தலைமகளாக திகழும் அவள் விகடன், 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பெண்ணென்று கொட்டு முரசே என்று முழங்கியவாறே வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அவள் விகடன், மருத்துவம், சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
அவள் விருதுகள் 2021 – சாதனைப் பெண்கள் சங்கமித்துள்ள இவ்விழாவை நேரலையில் காணலாம்.