காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (18) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 7 குழந்தைகளும் அடங்குவர். அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவித்தார்.