காசாவில், அடுக்குமாடி குடியிருப்பில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டன.
23 லட்சம் பேர் வசிக்கும், இடநெருக்கடி மிக்க ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினர் முழுவதுமாக உயிரிழந்ததால், தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது.